39 சிறார் கதைகள் அடங்கிய தொகுப்பு. குழந்தைகள், சிறார்-சிறுமியரின் உலகத்தை உணர்ந்து எழுதப்பட்ட கதைகள்.
இயந்திரங்களும், தொழில் நுட்பங்களும் காவுகொண்ட தமிழ் நிலத்தின் தொல் அடையாளங்களை மீட்கும் முயற்சி இது.
எளிமையான வடிவமும், கச்சிதமான மொழியும், நகைச்சுவையும், குசும்புமிக்கத் தன்மைகளும் கூடி வர அற்புதமாக நெசவு நெய்யப்பட்ட கலை அழகுமிக்க கதைத் தோரணங்கள் இவை. இவற்றை எழுதிய மாமா நாணற்காடனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்நூல் தமிழ்க் குழந்தை இலக்கிய வெளியில் பெரும் அதிர்வுகளை உருவாக்கும்.
முனைவர் இரா.காமராசு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.