Share this book with your friends

PACHAI AANMEEGAM / பச்சை ஆன்மீகம்

Author Name: Agri. Dr. Y. Rajakumar | Format: Hardcover | Genre : Others | Other Details

அங்கிங் கென்னாதபடி எங்கும் நிறைந்த இறைவன் மண்ணைப் படைத்தார். விண்ணைப் படைத்தார், அவற்றை ஆண்டு கொள்ள மனிதனைப் படைத்தார். இயற்கையை அனுபவிக்க வேண்டுமே தவிர, அதை அழித்துவிடக் கூடாது. மனித குலம் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படும் உணவு, தண்ணீர், காற்று போன்றவை தற்போது மாசுபட்டு மனித வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு காலத்தில் நமது முன்னோர்கள் கிராமங்களில் ஆரோக்கியமாக 120 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளனர். சிலர் அதற்கு அதிகமாகவும் வாழ்ந்துள்ளனர். இந்த மனித வாழ்வுக்கு சூனியம் வைக்கும் விதத்தில் சுற்றுச்சூழல் கெட்டுக்கிடக்கிறது. மனித இனத்தைக் காப்போம் என்னும் கூக்குரல் உலகெங்கும் ஒலித்துகொண்டிருக்கிறது. மனிதகுலம் தழைக்க வேண்டுமானால் மண்வளம் பெருக வேண்டும்.

சுற்றுச்சூழல் சமநிலை உலகெங்கும் நிலவ வேண்டியதின் அவசியம் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. பச்சை ஆன்மீகம் பாரெங்கும் பரவினால் மட்டுமே நமது பாரத
தேசத்தைப் பாதுகாக்க முடியும். இதை மையப்படுத்தி, கிறிஸ்தவர்களின் புனித நூலாகிய
விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டு, நூல் ஆசிரியர் தேசோபகாரி மாத இதழில்
எழுதிய பல்வேறு கட்டுரைகளைத் தொகுத்து பச்சை ஆன்மீகம் என்னும் சுற்றுச்சூழல்
நூலாக வெளியிட்டுள்ளார்.

Read More...
Hardcover

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Hardcover 330

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

Agri. Dr. ஒய். இராஜகுமார்

நூல் ஆசிரியர் பசுமைசாம்பியன் அக்ரி டாக்டர் ஒய். இராஜகுமார் அவர்கள் 1955- ஆம் ஆண்டு மேய் மாதம் 13-ம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தெருவுக்கடை கிராமத்தில் திரு. ஏசுதாஸ், திரு. கமலபாய் தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தார். திருமதி. ஷாந்தி என்பவரை வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொண்ட இவருக்கு வினோத் ராஜா என்ற மகனும் ஜில்னா ஜெரிக்ஸ் என்ற மகளும் உண்டு.

இவர் தனது தொடக்கக் கல்வியை அரசு தொடக்கப்பள்ளி தட்டான்விளையிலும், உயர்நிலைக் கல்வியை கன்கார்டியா மேனிலைப் பள்ளி பூட்டேற்றியிலும், தாவரவியல் பட்டப்படிப்பை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியிலும், வேளாண்மை பட்டப்படிப்பை உத்திரபிரதேசம் அலகபாத்திலும், இளங்கலை சட்டவியல் மற்றும் முதுகலை சமூகவியல் பட்டப் படிப்புகளை அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலமும் முடித்தார்.

இவர் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை, விதைசான்றுத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகியவற்றில் பணிபுரிந்து வேளாண்மைத் துணை இயக்குநராக பணிநிறைவு பெற்றவர். அதோடு கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா என்னும் பசுமைப் பேரியக்கத்தை நிறுவி, அதன் நிறுவனத் தலைவராக செயல்பட்டு வருபவர். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர் விவசாயம் சார்ந்த 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டவர். எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் உள்ள இவர் பசுமைப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர்.

தொடர்புக்கு : அக்ரி டாக்டர் ஒய். இராஜகுமார்.
அலைபேசி : 9443265003
மின்னஞ்சல் : agriraja@gmail.com

Read More...

Achievements

+5 more
View All