சரசுவதி என்கிற பட்டணத்தைச் சேர்ந்த ஒரு படித்த ஆசிரியைக்கும் காட்டில் வசிக்கும் மலைவாழ் இனமான மடிலா இனத்தைச் சேர்ந்த சிவு என்கிற ஆணுக்கும் இடையே ஏற்படுகிற காதலும் அதனால் அவர்கள் இருவரும் சந்திக்கும் இன்னல்களும், திருமணம் ஆகியும் ஆகாதது போல் தங்கள் திருமண வாழ்வை துளைத்துவிட்டு நரகத்தில் வாழும் நிலையையும் அழகாகப் படம்பிடித்துக் காட்டப்போகிறது இந்நாவல். இதில் குறிப்பிடப்படும் ஊரோ, மக்களோ, இனமோ கதைகளமோ அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை. என் மனதில் உதித்த சில கற்பனைகளையும் என் வாழ்க்கையில் நான் கண்ட சிலவற்றையும் கலந்த கதையாகவே இக்கதை அமைந்திருக்கிறது.