சமுதாயத்தை நெறிப்படுத்தும் அரசியல் கொள்கைக் கொண்ட செவ்விழியனை அரசியல் ஏணியில் திரை மறைவில் இருந்து ஏற்றிவிட்ட துருப்பே அவன் போகும் பாதைக்கான சிவப்பு கம்பளத்தை விரித்து வைக்கிறது.
அப்பாதை அவன் வகுத்த கொள்கைக்கு ஒத்துவராத வேறு மார்க்கத்திற்கான பாதை என்று உணர்ந்து பின் விலகிப் போக நினைத்தும் முடியாமல் புலிவாலை பிடித்தக்கதையாக அவதியுறும் செவ்விழியனின் கதை இது.