இந்துமதம் அடிப்படைவாதம் தலைதூக்கி வரும் காலமிது. இந்துமத மீட்பு அல்லது கோவில் மீட்பு என்பதன் பொருள் வழக்கொழிந்து போன நால்வகைப் பகுப்புமுறையை மீட்டுக் கொணர்ந்து பார்ப்பனஆதிக்கத்தைநிலை நாட்டுவதேயாகும்.அதன் தொடக்கமாகத்தான் அரசு இந்துக் கோவில்களில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முழக்கமும் எழுகிறது. அரசு வெளியேறினால் என்னவாகும் என்று நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டியதில்லை. தில்லைக் கோவிலில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளைக் கவனித்து வந்தால் போதுமானது' சென்ற நூற்றாண்டு வரை கோவில்களைக் கொள்ளைக் கூடாராமாக்கி சுரண்டிக் கொழுத்த பார்ப்பன மேல்சாதி வகுப்பினர் தமது சமூக மேலாண்மயை மீண்டும் நிலை நாட்ட முயல்கின்றனர். தமிழ் பாடுவதற்கான அரசாணையாக இருக்கட்டும், கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக இருக்கட்டும் இரண்டையுமே திமுக அரசுதான் செய்தது. அரசியல் கட்டாயத்திற்காக செய்தது என்றாலும் ஏதோ ஒருவகையில் செய்தது .ஆனால் அதன் பிறகு எதையும் செய்யவில்லை என்பதும் உண்மை.இனிமேலாவது செய்யுமா என்பதுதான் கேள்வியே!