சோழமன்னர்களால் கட்டப்பட்டு. சோழ, பாண்டிய, விஜயநகர, நாயக்க மன்னர்களால் பராமரிக்கப் பட்ட தில்லைக் கோவில் என்ற ஸ்ரீ சபாநாயகர்கோவில் ( இதுதான் அக்கோவிலின் சட்ட பூர்வமான பெயர்) தமக்கே முழு உரிமை படைத்த கோவில் என்று தீட்சிதர்கள் உரிமைக் கொண்டாடினர். கி.பி 1885 முதல் இன்றுவரை அந்த சட்டப் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.இறுதியாக 2014 - 2019 இல் உச்ச நீதிமன்றம் தீட்சிதர்கள் தனிமதக்குழுவினர் என்றும் , தில்லைக் கோவில் நிர்வாகம் மற்றும் அதன் சொத்துகள் தீட்சிதர்களின் முழு உரிமை தான் என்றும் தீர்ப்பளித்துவிட்டது. அது முதல் தீட்சிதர்களின் ஆணவப் போக்கு அதிகரித்துவிட்டது. இனி தமிழ் நாடு அரசு என்னசெய்யப் போகிறது? , என்ன செய்யவேண்டும் என்பதை ஆய்ந்து எழுதப்பட்ட நூல் இது.