Share this book with your friends

Veetu Maadi Thottam / வீட்டு மாடித் தோட்டம்

Author Name: Agri. Dr. Y. Rajakumar | Format: Hardcover | Genre : Others | Other Details

நகர்ப்புறங்களில் விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாறி வருகின்றன. இந்நிலையில் வீட்டு மாடியில் தோட்டமிடும் வழிமுகைள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. நிலம் இல்லாதவர்கள் கூட தங்கள் வீட்டு மாடியில் காய்கறிகள், பூச்செடிகள், மூலிகைகள் போன்றவற்றை சாகுபடி செய்யலாம். வீட்டிலுள்ள அனைவரும் பொழுதுபோக்காக பங்கேற்கும் விதத்தில் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து பயன்பெறலாம். மாடித்தோட்டத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.


வீட்டு மாடித்தோட்டம் அமைக்கும் கலை தற்போது எல்லா இடங்களிலும் குறிப்பாக புதிய நகரப் பகுதிகளில் வேகமாக முன்னேறி வருகிறது. நமக்குத் தேவையான செடிகொடிகளை அங்கும் இங்குமாக நட்டுவிட்டால் மாடித்தோட்டம் வந்துவிடாது. மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய விஞ்ஞான நுணுக்கங்களும் விளக்கங்களும் இப்புத்தகத்தில் கோர்வையாக இடம்பெற்றுள்ளன. வீட்டு மாடித்தோட்டம் அமைப்பதில் ஈடுபட்டுள்ள, ஈடுபட விருப்பமுள்ள அனைவருக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

Agri. Dr.ஒய்.இராஜகுமார்

நூல் ஆசிரியர் பசுமைசாம்பியன் அக்ரி டாக்டர் ஒய். இராஜகுமார் அவர்கள் 1955-ஆம் ஆண்டு மேய் மாதம் 13-ம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தெருவுக்கடை கிராமத்தில் திரு. ஏசுதாஸ், திருமதி. கமலபாய் தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தார். திருமதி. ஷாந்தி என்பவரை வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொண்ட இவருக்கு வினோத் ராஜா என்ற மகனும் ஜில்னா ஜெரிக்ஸ் என்ற மகளும் உண்டு.

இவர் தனது ஆரம்ப கல்வியை அரசு தொடக்கப்பள்ளி தட்டான்விளையிலும், உயர்நிலைக் கல்வியை கன்கார்டியா மேனிலைப் பள்ளி பூட்டேற்றியிலும், தாவரவியல் பட்டப்படிப்பை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியிலும், வேளாண்மை பட்டப்படிப்பை உத்திரபிரதேசம் அலகபாத்திலும், இளங்கலை சட்டவியல்
மற்றும் முதுகலை சமூகவியல் பட்டப் படிப்புகளை அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலமும் முடித்தார்.


இவர் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை, விதைசான்றுத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகியவற்றில் பணிபுரிந்து வேளாண்மைத் துணை இயக்குநராக பணிநிறைவு பெற்றவர். அதோடு கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா என்னும் பசுமைப் பேரியக்கத்தை நிறுவி, அதன் நிறுவனத் தலைவராக செயல்பட்டு வருபவர். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர் விவசாயம் சார்ந்த 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டவர். எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் உள்ள இவர் பசுமைப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர்.

Read More...

Achievements

+5 more
View All

Similar Books See More