ஒரு வாகனத்தை நாம் இயக்கும் முன் நமக்கு அதனுடைய அடிப்படை விடயங்கள் தெரிய வேண்டியது அவசியம்.உதாரணமாக ஒரு காரை நாம் ட்ரைவிங் செய்ய அதனுடைய பண்புகள் அதாவது கிளட்ச்,ஆக்ஸிலேட்டர்,கியர் பற்றியும் அதனை இயக்கும் முறையையும் கற்றுக்கொள்ளவேண்டும்.கியரை மாற்ற கிளட்ச் அவசியம் என்பதனை அறிந்த அதே நேரத்தில் அதனை அநுபவரீதியாக (ப்ராக்டிகலாக) இயக்கியும் பார்க்கவேண்டும்.அதன் ஸ்டியரிங் இயக்கம் அனுபவ ரீதியாகத்தான் பழகமுடியும்.வெறும் தியரியை மனப்பாடம் செய்வதில் மட்டும் நாம் பழகவியலாது என்பதனை நினைவில் கொள்ளவும்.