Share this book with your friends

Business Champions Handbook (Large Format) / பிசினெஸ் சாம்பியன்ஸ் ஹாண்ட்புக் (Large Formaat) An Entrepreneur's Guide To Build Extraordinary Organisation

Author Name: LS Kannan | Format: Hardcover | Genre : Business, Investing & Management | Other Details

கடந்த சில ஆண்டுகளாக, Business Champions Program® (BCP) என்ற weekly online sessions மூலமாக நூற்றுக்கணக்கான தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த ஆன்லைன் பயிற்சி, பல  தொழில் முனைவோரின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. இந்தப் பயிற்சி, பினினெஸின் தினசரி பிரச்சினைகளைத் தீர்ப்பது மட்டுமல்லாமல் அதில் அசாதாரண வளர்ச்சியை அடையவும் உதவுகிறது. இதில் பங்கேற்ற பல தொழில்முனைவோர் ஒரே வருடத்தில் தங்கள் வருவாயை இரட்டிப்பாக்கிக் காட்டி இருக்கிறார்கள். 

இந்த புத்தகம் ஆன்லைன் செஷன்களுக்கான Handbook ஆக வடிவமைக்கப் பட்டிருந்தாலும் எந்த ஒரு தொழில்முனைவோரும் இதனை ஒரு business guideஆகப் பயன்படுத்தலாம். நீங்கள் BCP இன் பங்கேற்பாளராக இருந்தாலும், உங்கள் தொழிலை வளர்க்க விரும்பும் தொழில்முனைவோராக இருந்தாலும், இந்த கையேடு உங்கள் வழிகாட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிசினெஸ் வளர்ச்சியில் அறிவியல் பூர்வமான உத்திகள், கோட்பாடுகள், வழிமுறைகள் மற்றும் நுண்ணறிவுகளை இந்தப் புத்தகம் உள்ளடக்கி இருக்கிறது.

இந்த கையேட்டில், நடைமுறை பயிற்சிகள், செயல்படுத்த எளிமையான வழிமுறைகள் மற்றும்  வெற்றிகரமான தொழில்முனைவோரின் அனுபவ அறிவையும் நீங்கள் பெறமுடியும். உங்கள் பிசினெஸைப் பெருக்கி, இலக்குகளை அடையும் பாதையில் இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்.

Dataவைப் பயன்படுத்தி முடிவுகளை எடுக்கவும், தைரியமான செயல்பாட்டில் இறங்கவும் அதன்மூலம் நீங்கள் விரும்பும் வெற்றியை அடையவும் இந்த கையேடு உங்களுக்கு அதிகாரம் ஊக்கம் கொடுக்கும் என்று நம்புகிறேன். 

நினைவில் கொள்ளுங்கள் - வெற்றிக்கான பாதை  எளிதானது அல்ல. ஆனால் சரியான வழிகாட்டுதலுடன், வெற்றி எப்போதும் மிக அருகிலேயே இருக்கிறது.

Read More...
Hardcover
Hardcover 1400

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

எல். எஸ். கண்ணன்

LS கண்ணன் CSense Management Solutions மற்றும் Business Champions Academy ஆகியவற்றின் நிறுவனர் மற்றும் CEO. 22 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் அனுபவம் மற்றும் 15 ஆண்டுகள் Business Consulting அனுபவமும் நிறைந்தவர். லீன் சிக்ஸ் சிக்மா கைசன் ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும், Leadership Coach ஆகவும், கண்ணன் சிறு வணிகங்களை மேம்படுத்துவதற்கும் பெரிய நிறுவனங்களில் உள்ள சிக்கலான சவால்களைத் தீர்ப்பதற்கும் ஆர்வமுடன் பணியாற்றி வருகிறார். 

1,000 சிறு வணிகங்களை செழிப்பான கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றும் அவரது நோக்கத்தால் அவரை இயக்கிகொண்டு இருக்கிறது. இந்த முயற்சியில் Business Champions Program மற்றும் Business Champions Handbook, உங்கள் நிறுவனத்தின் 10x வளர்ச்சிக்கான உத்திகள் மற்றும் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்டுள்ளன. 

Read More...

Achievements

+6 more
View All