Share this book with your friends

Salai Padukapu Kavasam / சாலை பாதுகாப்பு கவசம் நீங்கள் சாலையில் பாதுகாப்பாக இருப்பீர்கள்

Author Name: A D Joshi | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

Amazon மற்றும் FlipKartக்கான இணைப்புகள் இந்தப் பக்கத்தின் கீழே கிடைக்கும். இந்தப் புத்தகம்,சாலை விபத்துகளுக்கான காரணங்களை அலசுகிறது. இந்தப் புத்தகத்தை பல மொழிகளில் மொழிபெயர்த்தால், வாசகர்கள் தங்கள் தாய்மொழியில் சாலைப் பாதுகாப்பின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள உதவும். இன்று உலகிலேயே அதிக சாலை விபத்து மரணங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

சாலை விபத்துகளால் தினமும் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதால், வாகனம் ஓட்டுவது நம் அனைவருக்கும் மிகவும் ஆபத்தானதாகிவிட்டது.

நம் நாட்டில் நடக்கும் பல விபத்துகளின் விவரங்களைப் பார்த்தால், 80% க்கும் அதிகமான விபத்துக்கள், பொதுவான வடிவத்தைக் கொண்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த விபத்துகள் நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

பெரும்பாலான விபத்துக்களுக்குக் காரணங்களை, நான் கண்டறிந்தேன். அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, விரிவாக இந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ளன. எந்த ஓட்டுனரும், அவற்றை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் முன், இந்தப் புத்தகத்தைப் பரிசளித்தால் சிறந்தது. இது சாலைகளில் ஏற்படும் அபாயங்களைச் சமாளிக்க அவர்களுக்கு வழிகாட்டும்.

Read More...
Paperback
Paperback 230

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஏ டி ஜோஷி

ஆசிரியர் ஏ டி ஜோஷி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஊக்குவித்து, பரப்பி வருகிறார்.

கனரக வாகனங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் தொழிற்சாலையில், 40 வருட அனுபவமுள்ள பொறியாளர். சாலை விபத்துகள் குறித்த, உண்மைகளைக் கண்டறியும் குழுக்களிலும் பங்கேற்றார்.

புத்தகங்கள் எழுதுவது மட்டுமின்றி, தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மற்றும் வழக்கமான வகுப்புகள் நடத்தி, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்பி வருகிறார்.

ஓய்விற்குப் பிறகு, ஆசிரியர் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியதோடு மட்டுமல்லாமல், இது நாடு முழுவதும் பரவ வேண்டும் என, பல மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளார். மற்றும் பல விபத்துக்களை பகுப்பாய்வு செய்வதிலும் தனது முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்.

இந்தப் புத்தகம் சாலைப் பாதுகாப்பிற்கான ஆசிரியரின் பங்களிப்பாகும், மேலும் அதன் உள்ளடக்கங்கள் நாட்டு மக்களின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமானால், இந்தப் புத்தகத்தின் நோக்கம் நிறைவேறும்.

Read More...

Achievements

+8 more
View All