Share this book with your friends

Sirpam Ondru Vadivam Irandu / சிற்பம் ஒன்று வடிவம் இரண்டு Kanden Rajasimma pallavanai / கண்டேன் இராஜசிம்ம பல்லவனை

Author Name: Dr. K. Dakshinamoorthy Sthapati Ph.D | Format: Hardcover | Genre : Arts, Photography & Design | Other Details

பல்லவ மாமன்னன் இராஜசிம்மன், காஞ்சி கைலாசநாதர் கோயிலில் தன்னை இரட்டைச் சிற்பத்தில் செதுக்கிச் சென்றிருக்கிறான் என்பதை பதின்மூன்று நூறாண்டுகளுக்குப் பின்னர் முதன்முதலாகக் கண்டு சொல்வதே இப்புத்தகம். வரலாற்றில் ஒரு சிற்பத்தில் இரு வடிவங்களைச் செய்த சிற்பங்கள் மிக அரிதாகவேக் கிடைக்கின்றன. அவ்வரிசையில், யாரும் எளிதில் தன்னைக் காணாதவாறு ஒரு சொல் இரு பொருள் போல ஒரு சிற்பத்தில் இன்னொரு சிற்பமாய் உறைந்திருந்து வந்தாரை நோக்கும் மன்னனாக காஞ்சி கைலாசர் கோயில் வாசலில் வீற்றிருக்கிறான் இராஜசிம்மன் என்பதை மொழி இலக்கணம் மற்றும் சிற்ப இலக்கணம் மூலமாக இப்புத்தகத்தில் உறுதி செய்கிறார் நூலாசிரியர்.

Read More...
Hardcover
Hardcover 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முனைவர். க. தக்ஷிணாமூர்த்தி ஸ்தபதி Ph.D

ஸ்தபதி முனைவர்.க.தட்சிணாமூர்த்தி (62),  மரபுச் சிற்பக்கலையில் இளங்கலைப் பட்டம், தத்துவம், பண்பாடு, சமயம் இவற்றில் முதுகலைப் பட்டம் மற்றும் சிற்பக்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் மாநில உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் ஸ்தபதி. மேலும் தனது தாய்மாமா முனைவர். வை.கணபதி ஸ்தபதியின் வாஸ்து வேத அறக்கட்டளையின் தலைமை அறங்காவலர் ஆவார். இவருடைய தந்தை திரு.எஸ்.கே.ஆச்சாரி, புகழ் பெற்ற கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை வடிவமைத்து உருவாக்கிய கட்டடக் கலைஞர் ஆவார். 

ஸ்தபதி க.தட்சிணாமூர்த்தி இந்தியாவிலும், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை நாடுகளிலும் பல ஆலயங்களை வடிவமைத்திருக்கிறார் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை நாடுகளிலும் பல ஆலயங்களை வடிவமைத்திருக்கிறார். இவர் உளி எழுத்துக்கள் எனும் தமிழ் நூலையும், ‘The Architectural Legacy of Dharmaraja Ratha’ மற்றும் ‘The Introspection in Indian Architecture’  என்ற ஆங்கில புத்தகங்களை எழுதியிருக்கிறார்

Read More...

Achievements

+2 more
View All