எதை நோக்கி , எங்கிருந்து ,எப்படி ,ஏன் எதற்காய் , எல்லாமே பயணத்தின் கேள்விகள் தான். தொடக்கப்புள்ளிகளும் இல்லை முடிவு புள்ளியும் இல்லை.. பாதையின் பயணம் நினைவுகளின் பயணமும் வெவ்வேறானவை. பாதையின் பயணத்தில் தொடக்கமும் முடிவுமாய் அமையும் நேரத்தில் நினைவுகளின் பயணத்தில் தீர்மானிக்கப்படுவதில்லை. பிறக்கும் குழந்தையின் தேடலில் தொடங்கி இறக்கும் வரை அவனது நினைவுகள் ஏதோ ஒன்றோ , இரண்டோ , அதற்கு மேற்பட்ட பாதைகளிலோ பயணித்து கொண்டே தான் இருக்கின்றன. இதில் தேடலும் தெளிதலும் அவசியமாகிறது.