ஜோதிட பெருமக்களுக்கும், ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கும், மிகவும் பயன் தரும் வகை எனது நூல்கள் "நவக்கிரஹங்களும் ஆன்மீக பரிஹாரங்களும் பாகம் 1 மற்றும் 2" இணைத்து "ஆன்மீக பரிகாரம் பாகம் 1 மற்றும் 2" என்ற பெயரில் வெளியிடுகின்றேன். எனக்கு ஜோதிட அரிச்சுவடியை கற்றுக்கொடுத்த ஆசான் மறைந்த திரு எஸ். ஆர் வெங்கட சுப்ரமணியன் (எட்டையபுரம்) அவர்களுக்கு நன்றி கூறி இந்நூலை அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். திதி, மற்றும் யோகம் பற்றிய விபரங்களை 2004ம் ஆண்டிலேயே எனது இரண்டாம் பாகத்தில் எழுதியிருக்கிறேன்.
பரிகார ஆராய்ச்சியில் என்னை நன்கு ஊக்குவித்து கற்றுத் தந்த மறைந்த ஆன்மீக செம்மல் ஐயா திரு மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு நான் என்றும் கடமை பட்டு இருக்கிறேன். "விஜயாபதியில் நவ அபிஷேகம்" என ஜோதிட பூமி இதழில் 1998 ஆம் ஆண்டு நவ அபிஷேகத்தை நான் பரிஹாரமாக செயல் படுத்தியதை பற்றி என்னை பாராட்டி ஐயா அவர்கள் எழுதியுள்ளார்கள்.
மேலும் வ்யாதிபாத நாம யோகத்துக்கு தாமிரபரணி ஆற்றங்கரையில் சேரன்மஹாதேவியை பற்றி ஒரு வருடம் ஆராய்ச்சி செய்து அதை மக்களுக்கு கொண்டு சென்று அவர்கள் வாழ்க்கையை வளம் பெற செய்தது எனக்கு ஓர் மனநிறைவு. இதனால் லட்சக் கணக்கானோர் பயன் பெற்று இருக்கிறார்கள்.
இந்நூலின் ஒவ்வொரு விஷயமும் தங்களை மறுபடி மறுபடி படிக்கத் தோன்றும். படித்து பயன் பெற்று அதனை எனது இமெயில் முகவரியில் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
அன்புடன் தங்கள்
அஷ்வத் ஷங்கர்
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners