Share this book with your friends

Is Corruption a real problem? / ஊழல் எல்லாம் ஒரு பிரச்சனையா? அச்சம் தவிர்த்தேன்! அறப்போர் செய்தேன்! / Break the shackles of fear! Do the Good Fight!

Author Name: Jayaram Venkatesan | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

பயம்! நம் கண்முன்னே நடக்கும் அநீதி மற்றும் ஊழல்களை கேள்வி கேட்காமல் இருப்பதற்கு காரணம் பயம். அந்த பயத்தை உடைத்தெறிந்து அநீதி மற்றும் ஊழல்களுக்கு எதிராக ஜெயராம் வெங்கடேசன் அறப்போர் செய்யத் துவங்கியது எப்படி? 

அறப்போர் இயக்கம் கடந்த 10 ஆண்டுகளில் துல்லியமான ஆதாரங்களுடன்  வெளிப்படுத்திய சில முக்கிய ஊழல் சம்பவங்களை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. பதவியில் இருக்கும் ஒரு அமைச்சரின் ஊழலை கேள்வி கேட்டபோது, அறப்போர் இயக்கம் எதிர்க்கொண்ட தாக்குதல்கள் குறித்தும் அதிலிருந்து போராடி மீண்டதை குறித்தும் இந்நூல் பதிவு செய்கிறது. மக்கள் ஒன்று கூடினால் மாற்றங்கள் சாத்தியம் என்பதற்கான பல அறப்போர் அனுபவங்களை பகிர்கிறார் ஜெயராம்.  ஊழல் எல்லாம் ஒரு பிரச்சனையா? என்ற கேள்விக்கு மக்கள் சந்திக்கும் அன்றாட அநீதிகளில் இருந்து விடையை தேடுகிறது இந்த புத்தகம்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

5 out of 5 (2 ratings) | Write a review
syonruthra

Delete your review

Your review will be permanently removed from this book.
★★★★★
rushyanthbaskar

Delete your review

Your review will be permanently removed from this book.
★★★★★

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ஜெயராம் வெங்கடேசன்

ஜெயராம் வெங்கடேசன், அமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் முதுகலைப் பட்டம் (MS- Electrical Engineering) பெற்றவர். பின்னர் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கண்ட்ரிவைடு செக்கியுரிடீஸ் ரிசர்ச்  நிறுவனத்தில் துணைத் தலைவர் பதவியில் பணியாற்றினார். சமூக மாற்றத்திற்கான தனது ஆர்வத்தை பின்பற்றி வேலையை துறந்து இந்தியா திரும்பினார். அவரும் அவர் நண்பர்களும் இணைந்து நீதியும் சமத்துவமும் உள்ள சமூகத்திற்காக வேலை செய்ய அறப்போர் இயக்கம் என்னும் மக்கள் இயக்கத்தை நிறுவினார்கள். அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளராக கடந்த 10 ஆண்டுகளில் தயக்கமின்றி பல துறை ஊழல்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் ஜெயராம் வெங்கடேசன். பல்வேறு மிரட்டல்களையும் தடைகளையும் எதிர்கொண்டபோதிலும், அநீதிக்கு எதிராகப் போராடி மக்களின் உரிமைகளைக் காக்கும் தனது பணியில் அவர் உறுதியுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Read More...

Achievements

+5 more
View All