கோரமான விபத்திலிருந்து தப்பித்து பிழைத்தவன் மனோஜ், அவன் அந்த விபத்தில் ஓர் டைரியை கண்டெடுக்கிறான். அந்த டைரியில் இடம்பெற்றிருக்கும் காதல் கதையானது அவனுக்குள் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது. ஆனால் அந்த டைரியை எழுதியவன் அந்த விபத்தில் இறந்துவிட்டதால் அவன் சொல்லாமல் விட்டு சென்ற காதலை தேடி பயணத்தை தொடங்குகிறான். அந்த பயணத்தில் அவன் சந்திக்கும் ஒவ்வொரு திருப்பங்களும் அவனை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து செல்கிறது.