உலகில் பிறக்கும் உயிரினங்களுள் தாவர வகைகள் தவிர்த்துப் பிற உயிரினங்கள் அனைத்தும் ஆண்> பெண் இனச்சேர்க்கை மூலமாகவே பிறக்கின்றன. அறிவியல் அடிப்படையில் செயற்கையான பிறப்பு ஏற்பட்டாலும் இயற்கையான பிறப்புக்கு ஈடில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆண்,பெண் இருவரும் இணைந்து இல்லறத்தை நல்லறமாக்கி இனிதான வாழ்க்கை வாழ பிள்ளைப்பேறு இன்றியமையாததாகிறது. பிள்ளைப்பேறானது ஆண்>பெண் இருவரும் காமம் ஏற்பட்டு உடல் சார்ந்த இணைப்பில் ஈடுபட்டு இன்புற்ற வழி சாத்தியமாகிறது. அத்தகைய காமத்திற்குக் கடவுளானவர்; காமன் என்னும் மன்மதன் ஆவார். உயிர்களின் உற்பத்தி காமத்தின் வாயிலாகவே விளைகிறது என்பது உலகறிந்த உண்மையாகும். காமக்கடவுளான மன்மதனும் அவனுடைய மனைவியான ரதியும் இன்றும் சில கிராமங்களில் வழிபடக் கூடிய கடவுளர்களாக உள்ளனர்.
கொங்கு மண்டலமாம் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தைச் சார்ந்த பகுதியாகக் குமரலிங்கம் பேரூராட்சி விளங்குகிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதியாகக் குமரலிங்கம் பேரூராட்சி திகழ்ந்தது. தமிழுக்காகத் தலை கொடுக்கத் துணிந்த குமண வள்ளல் ஆண்ட புனித பூமியான இவ்வூர் குமணனின் பெயரினை முன்னதாகக் கொண்டு குமணலிங்கம் என்றிருந்து மருவி குமரலிங்கம் என்றானது. அமராவதி ஆற்றங்கரையோரத்தில் செழிப்பானதாக விளங்கும் இவ்வூரில் ஆண்டுதோறும் மாசிமாதம் வளர்பிறை திதியில் காமன் பண்டிகை என்ற பெயரில் மன்மதனுக்கும் ரதிக்கும் விழாவெடுத்துக் கொண்டாடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை பிள்ளைப்பேற்றுடன் பெற்று வாழவும் மன்மதன் - ரதி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners