பலகாலமாக தமிழ்நாட்டையும் , தென்னாட்டையும் அச்சுறுத்தி வந்த புரையோடிய புண்ணாக புற்று நோயினும் கொடிய நோயாக இருந்து வந்த தேவதாசிக் குலமுறை வழக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் கிள்ளி எறிந்த இரு பெரும் ஆளுமைகளும் பெண்களே என்பது தமிழர்க்கு பெருமை சேர்க்கும் செய்தியாகும் .அந்த இரு மாதர் குல மாணிக்கங்களான
மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியும், முவலூர் அன்னையும் ராமாமிர்தம் ஆகிய இருவரையும் இளந்தமிழர்களுக்கு மீள் அறிமுகம்செய்யும் முயற்சியே இந்த நூலாகும்