இப்படித்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறை எனக்கில்லை. எப்படியும் எழுதலாம் என்ற மெத்தனமும் இருந்ததில்லை. அந்தந்த நேரத்தில் என் மனம் எந்தவித உணர்வில் நிரம்பித் தளும்புகிறதோ அவ்வகையான எழுத்துக்களையே கொட்டும். அதற்கு இந்த புத்தகம் ஓர் உதாரணம்...
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.
Nanenbathe..! / நானென்பதே..!
Ratings & Reviews
Share:
Sorry we are currently not available in your region.
பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்
கணினியில் ஆயிரம் மொழிகள் படித்தாலும் ஆதி மொழியாம் எம் தமிழே என்னைக் கர்வம் கொள்ள வைக்கிறது. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியின் அந்த இறுமாப்பை நானும் கொஞ்சம் களவாடி எழுதுகோலை விட்டுவிடாது எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை வேறு திக்கை நோக்கி என்னை இழுத்துச் சென்றாலும் உடன் வருவது என் தமிழன்னை என்ற உவகையில் பயணிக்கிறேன்.
அற்புதங்கள் அள்ளித் தரும் இப்பயணத்தில் தமிழன்னை மட்டும் அல்லாது தமிழ் சொல்லிக் கொடுத்த என் அன்னை தந்தை உயிராய் வந்த உடன்பிறந்தோர், உறவாய் வந்த காதலன் அவன் நகலாய் உதித்த மகவு என சுற்றத்தோடு நகர்கிறேன். என் முயற்சிக்கு உறுதுணையாய் இருப்பது அவர்கள் தானே. அந்த நம்பிக்கையால் தான் மூன்று ஆண்டு கால எழுத்துப் பயணம் சாத்தியமானது.
கவிதை மட்டும் எழுதிக் கொண்டு கல்லுாரியில் சுற்றிக் கொண்டிருந்த காலத்தில் கதை எழுதுவாய் என்று யாராவது சொல்லியிருந்தால் நான் சிரித்துக் கடந்திருப்பேன். ஆனால் இன்று அது உண்மையில் நடந்திருக்கிறது..
மெதுவாக நடக்கும்..நல்லது மெதுவாகத்தான் நடக்கும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருங்கள்.. என்ற நம்மாழ்வார் ஐயாவின் கூற்றுப்படி இப்போது வாழ்வில் நல்ல விசயங்கள் நடக்க ஆரம்பித்திருக்கிறது.. அது இன்னும் மென்மேலும் பெருகி வளர வேண்டும் என்று இந்த அண்டத்திலும் எனக்குள்ளும் உறைந்திருக்கும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்...