Share this book with your friends

Siruthaniya Sirrunthigal / சிறுதானிய சிற்றுண்டிகள்

Author Name: Agri. Dr. Y. Rajakumar | Format: Hardcover | Genre : Others | Other Details

பழங்கால தமிழர்களின் மிக முக்கிய உணவுகளாக சாமை, வரகு, ராகி, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் இருந்தன.  இன்றும் கிராமப்புறங்களிலுள்ள மக்கள் இவற்றை ‘பசிதாங்கி’ உணவு எனக்கருதி உண்டு வருகின்றனர்.  சிறிய விதைகளைக் கொண்ட புல்வகை தாவரங்களான சிறுதானியங்கள் மானாவாரியாகப் பயிரிட ஏற்றவை.  குறைந்த வயதுடைய இப்பயிர்கள் கடினமான காலநிலைகளையும், சத்து குறைவான மண் வகைகளையும், பூச்சி நோய்த் தாக்குதலையும் தாங்கி வாழும் தன்மையுடையது.

ஊட்டச் சத்துக்களின் களஞ்சியமாக விளங்கும் சிறுதானியங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ஸ்னாக்ஸ், ஸ்வீட்ஸ் அயிட்டங்கள் அனைத்தும் வர்த்தக தந்திரங்களோடு தயாரிக்கப்படுபவை.  ஆனால் நொறுக்குத் தீனியாக பயன்படும் சிறுதானிய உணவுகளை நாமே தயாரித்து உண்பது நன்மை பயக்கும்.  இத்தகைய சமையல் தயாரிப்புகளுக்கு வழிகாட்டுகிறது இந்த புத்தகம். சிறுதானிய சிற்றுண்டிகளை சிறுவர்களும் பெரியவர்களும் முகம் சுழிக்காமல் ருசித்து சாப்பிடுவதற்கு சமையல் குறிப்புகளை உள்ளடக்கியது இந்நூல்.

Read More...
Hardcover

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Hardcover 365

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அக்ரி டாக்டர் ஒய். இராஜகுமார்

நூல் ஆசிரியர் பசுமைசாம்பியன் அக்ரி டாக்டர் ஒய். இராஜகுமார் அவர்கள்    1955-ஆம் ஆண்டு மேய் மாதம் 13-ம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தெருவுக்கடை கிராமத்தில் திரு. ஏசுதாஸ், திருமதி. கமலபாய் தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தார்.  திருமதி. ஷாந்தி என்பவரை வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொண்ட இவருக்கு வினோத் ராஜா என்ற மகனும் ஜில்னா ஜெரிக்ஸ் என்ற மகளும் உண்டு.

இவர் தனது ஆரம்ப கல்வியை அரசு தொடக்கப்பள்ளி தட்டான்விளையிலும், உயர்நிலைக் கல்வியை கன்கார்டியா மேனிலைப் பள்ளி பூட்டேற்றியிலும், தாவரவியல் பட்டப்படிப்பை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியிலும், வேளாண்மை பட்டப்படிப்பை உத்திரபிரதேசம் அலகபாத்திலும், இளங்கலை சட்டவியல் மற்றும் முதுகலை சமூகவியல் பட்டப் படிப்புகளை அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலமும் முடித்தார்.

இவர் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை, விதைசான்றுத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகியவற்றில் பணிபுரிந்து வேளாண்மைத் துணை இயக்குநராக பணிநிறைவு பெற்றவர். அதோடு கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா என்னும் பசுமைப் பேரியக்கத்தை நிறுவி, அதன் நிறுவனத் தலைவராக செயல்பட்டு வருபவர். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர் விவசாயம் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டவர். எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் உள்ள இவர் பசுமைப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். தேசிய அளவில் சேவா ரத்னா விருதுபெற்றவர்.

Read More...

Achievements

+5 more
View All