Share this book with your friends

Sunday letter / ஞாயிறு கடிதம் Handwritten Letters - 2023 / கைப்பட எழுதிய கடிதங்கள் - 2023

Author Name: Karthik Chidambaram | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

நவீன உலகத்தில் கைப்பட யார் கடிதம் எழுதுவார்கள்? ஏன் கையில் எழுத வேண்டும்? என்று எண்ணத் தோன்றும். தமிழில் தட்டச்சு செய்ய வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. பள்ளிகளிலும் தமிழ்த் தட்டச்சு சொல்லித் தரவில்லை. இதைக் கற்க அவசியமும் ஏற்படவில்லை.

அட்டவணை இல்லாமல் எப்போதாவது எழுதிக் கொண்டிருந்த வேளையில் வாராவாரம் எழுதி ஞாயிற்றுக்கிழமை பகிர்ந்தால் என்ன என்று தோன்றியது? நான் எழுதி யார் படிப்பார்கள் என்றும் தோன்றியது? யார் படிக்கிறார்களோ இல்லையோ, ஒவ்வொருவரும் எழுத வேண்டும். யாரும் படிக்கவில்லை என்றாலும் நாம் எழுதியது என்றேனும் ஒரு நாள் நமக்கே பயன்படும். இவ்வாறு தோன்றியதுதான், இந்த நூல். ஒவ்வொரு வாரமும் 2023-ம் ஆண்டு கைப்பட எழுதி இணையத்தில் வெளிவந்த கடிதங்களின் தொகுப்பு தான் ‘ஞாயிறு கடிதம்’. 

இந்தக் கடிதங்களால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது என்று தோன்றலாம். எழுத்திற்கு வலிமை உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். எந்த ஒரு பெரிய மாற்றமும் சிறுசிறு முயற்சிகள் மூலம் தான் உருவாகும். முன்னேற்றம், மாற்றம் விரும்புவோருக்கும் அதைச் செயல்படுத்த விரும்புபவர்களுக்கும் ஞாயிறு கடிதம் ஒரு கையேடாகக் கூட இருக்கலாம்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

கார்த்திக் சிதம்பரம்

கார்த்திக் சிதம்பரம்,

நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, டிசிகாப்.

கார்த்திக் சிதம்பரம்,  டிசிகாப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. அமெரிக்க நாட்டின் சிகாகோவில் உள்ள தனது சிறிய குடியிருப்பில் இருந்து இந்நிறுவனத்தைத் தொடங்கினார். 2 பேர், 2 கணினிகள் மற்றும் 2 மேசைகளுடன் தொடங்கப்பட்டு, இன்று டிசிகாப் நிறுவனத்தின் மென்பொருள், பல்வேறு உலக நாடுகளில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. கார்த்திக், தொழில்துறை நிறுவனங்களில் ஏற்படும் பின்னடைவுகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை வழங்கி வருகிறார். 

மொழி சார்ந்தப் பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்த சிந்தனையைச் செயல் வடிவத்திற்குக் கொண்டுவர, மக்களுக்குக் குறிப்பாக மாணவச் சமுதாயத்திற்குப் பொருட்பால் எனும் கருத்தரங்கம் மற்றும் பற்பல முயற்சிகளை  மேற்கொண்டு வருகிறார். சமுதாயப் பிரச்சனைகளும் அதனைத் தீர்க்கும் வழிமுறைகளும், வல்லுனர்கள்  நேர்காணல்கள், தான் செல்லும் நாடுகளில் வணிகம் , உலகில் சில முக்கிய இடங்கள், வாசிக்கும் புத்தகங்கள் பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொள்வதற்காக chatwithKC எனும் youtube channel ஐ நடத்தி வருகிறார்.

சாதாரண நிலையில் தொடங்கிய தனது வாழ்க்கைப் பயணத்தை, சிறந்த மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக, இன்று முழுவதும் தொலைதூர (Remote & Distributed Work) வழியிலேயே இயங்கிச் செயல்பட்டு வரும் டிசிகாப் மூலம் ஒரு சிறந்த வேலைக் கலாச்சாரத்தையும் சமூகத்தையும் உருவாக்கி, வெற்றிகரமாக இயக்கி வருகிறார். 

மேலும் அறிந்து கொள்ள தவறாமல் பாருங்கள் :  http://www.dckap.com

 

தவறாமல் இணைந்திருங்கள் …

http://www.karthikchidambaram.com 

https://www.linkedin.com/in/chatwithkc 

https://www.youtube.com/@chatwithkc 

https://twitter.com/chatwithkc

 

தொடர்பு கொள்ள…

contact@karthikchidambaram.com

Read More...

Achievements

+6 more
View All

Similar Books See More