வெல்வெட் குற்றங்கள்...
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போனதன் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு க்ரைம் நாவல்.
காணாமல் போன விமானம் பற்றிய முக்கிய தகவல்களை இந்தியத் தூதரகத்தின் தனி நபர் ஒருவர் பெறும்போது சங்கிலித் தொடராக குற்றங்கள் நடக்கின்றன.
உலகெங்கும் உள்ள வெவ்வேறு குழுக்கள் ,அதிகாரப்பூர்வமான மற்றும் அதிகாரப்பூர்வமற்ற முறையில், அந்த நிகழ்வு தொடர்பான வகைப்படுத்தப்பட்ட இரகசிய சங்கேத வார்தைகளை மற்றும் குறியீடுகளை அபகரிக்க முயற்சிக்கின்றன. ஏன்...?
அந்த விமானத்திற்கு என்னதான் நேர்ந்திருக்கும்...அதன் கதி என்ன?
இதுவரைக்கும்
உறுதியான இறுதியான ஆதாரங்கள் எதுவும் மக்கள் பார்வைக்கு கிடைக்கவில்லை.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது கடலில் மூழ்கியதா அல்லது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதா அல்லது ஒரு திணிககப்பட்ட தற்கொலை முயற்சியா?
என்ன நடந்திருக்கலாம்...?
எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கற்பனையில் இருந்து உருவான ஒரு தலைசிறந்த க்ரைம் த்ரில்லர் நாவல்.