தான் துப்பறியும் வழக்குகளில் தன் அறிவார்ந்த அணுகுமுறை மற்றும் நுண்ணறிவான விசாரணையால் எளிதாக குற்றவாளியை கண்டு பிடிக்கும் க்ரைம் ப்ரான்ச் அதிகாரி விவேக்குக்கும் அவனுடன் பணிபுரியும் விஷ்ணுவுக்கும், மண்ணில் புதைக்கப்பட்ட தலை பற்றி செய்தி ஒரு புலனாய்வு பத்திரிக்கையாளர் மூலம் தெரிய வருகிறது. அது எங்கு புதைக்கப்பட்டது ? எதற்காக புதைக்கப்பட்டது ? என தெரியாமல் விசாரணையை துவங்கியவுடனே விவேக்குக்கு புரிகிறது, இந்த வழக்கு ஒரு பெரிய விபரீதத்தை நோக்கி பயணிக்கிறது என்று. ஃபாரன்சிக் தரும் ஆய்வு முடிவுகள், பதற வைக்கின்றன. இதற்கிடையே டாக்டர் ருத்ரபதி தன் உதவியாளர்கள் ஹரி மற்றும் சுபத்ராவுடன் சேர்ந்து நினைவிழந்த நிலையில் இருக்கும் பெண்ணை ஒரு புதுமையான சிகிச்சை கொண்டு குணப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அந்த பெண்ணின் கணவன் அவளைத் தேடி வர, அது அனைவர்க்கும் பெரும் பிரச்சனையில் போய் முடிகிறது.
அது என்ன சிகிச்சை ? அந்த பெண் யார் ? அந்த பிரச்சனை என்ன?
விவேக், விஷ்ணு இருவரும் பயணிக்கும் பாதையில் ஏகப்பட்ட விடையில்லா வினாக்கள். மனித மூளை மரணத்திற்கு பிறகு என்னாகும்?
இறப்பில்லா வாழ்க்கை சாத்தியமா?
ஜாவார பழங்குடி மக்களின் எலும்புகள் தேடும் மருத்துவர்.. ஏதற்காக? மனித தலையில் என்ன இருந்தது?
பிராஸ்தட்டிக் விஷயங்களுக்கும் நைஜீரியாவுக்கும் என்ன தொடர்பு?,
ஒரு அரசியல்வாதியின் மர்ம மரணம்?
க்ளாஸ்டோரியம் பொட்டவீனம் என்றால் என்ன?
விடைகள் கிடைக்குமா ?
அந்த விடைகளில் குற்றவாளிகள் சிக்குவார்களா? இந்த மெகா கதை ஆழ்கடல் அமைதியும் ஒரு சூறாவளியின் பேரிரைச்சல் கொண்டது.