Share this book with your friends

Amar Malar / அமர் மலர் A Violent Love Story

Author Name: Yarana | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

"என்னைக் கொன்னுட்டு உன்னால வாழ முடியாது அமர்... உனக்கே அது தெரியும். ஏன்னா, நீயும் என்னைத் தீவிரமா காதலிக்கிறன்னு எனக்குத் தெரியும்."

அமரின் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது. துப்பாக்கியின் விசையை (Trigger) அழுத்த முடியாமல் அவனது விரல்கள் நடுங்கின.

அமரின் கண்கள் மலரின் கண்களை மட்டுமே உற்றுப் பார்த்தன.

அந்தப் பங்களாவிற்கு கீழே துப்பாக்கி, கத்திகளுடன் அமரின் ஆட்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் நின்றுகொண்டிருந்தனர். திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க, பதறிய அடியாட்கள் மேலே பார்த்தனர். பங்களாவின் மேற்கூரையில் இருந்த புறாக்கள் சிதறிப் பறந்தன.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

யாராணா

வணக்கம், நான் யாராணா.

எழுத்தின் மீது கொண்ட தீராத ஆர்வமே என்னை இந்த 'அமர்-மலர்' உலகிற்குள் அழைத்து வந்தது. நிழல் உலகக் குற்றப்பின்னணி, மனித உணர்வுகளின் இருண்ட பக்கங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதைகளை உருவாக்குவதில் எனக்குத் தனி ஈடுபாடு உண்டு.

என் எழுத்துக்கள் வெறும் கதைகளாக மட்டுமல்லாமல், வாசகர்களை அந்தச் சூழலுக்கே அழைத்துச் செல்லும் ஒரு அனுபவமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வன்முறையும் காதலும் பின்னிப் பிணைந்த இந்தத் திரில்லர் பயணத்தில், கதாபாத்திரங்களின் வலிகளையும் போராட்டங்களையும் யதார்த்தமாகப் பதிவு செய்ய முயன்றுள்ளேன்.

தற்போது இந்தத் தொடரின் அடுத்தடுத்த பாகங்களைச் செதுக்குவதிலும், உங்களை மேலும் பிரமிக்க வைக்கும் கதைகளை உருவாக்குவதிலும் மும்முரமாகப் பணியாற்றி வருகிறேன். எனது இந்தப் பயணத்தில் என்னோடு இணைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

Read More...

Achievements