You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇந்தப் புத்தகம் இரு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் ஆசிரியரின் தமிழ்க் கவிதைகள் உள்ளன. இரண்டாவது பகுதியில் சில தேர்ந்தெடுக்கப் பட்ட கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன - ஆசிரியரின் அழகான மொழிபெயர்ப்பில். எனவே, இந்தக் கவிதைகளை நீங்கள் இரண்டு மொழியிலும் ரசிக்கலாம். சிறிய, நகைச்சுவையான மற்றும் கிண்டலான கவிதைகளிலிருந்து, நீண்ட, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தத்துவார்த்தமான கவிதைகள் வரை இவற்றில் இடம் பெற்றுள்ளன. இவை உங்களுக்குப் புன்னகை, கண்ணீர் இரண்டையுமே வரவழைக்கக் கூடியவை. இந்தக் கவிதைகள் காதல், இழப்பு, துக்கம் முதல் அத்வைதம், மதம், ஆன்மீகம் வரை தொட்டுச் செல்கின்றன. ஒரு வாசகர் கருத்து தெரிவித்திருந்தது போல், "இந்தக் கவிதைகளின் அழகு அவற்றின் எளிமை மற்றும் நேரடித்தன்மையில் உள்ளது. ஒரு கவிதைத் தொகுப்புக்கு இது ஒரு வியக்கத்தக்க சாதனை எனலாம்"
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.வெ. அனந்த நாராயணன்
வெ. அனந்த நாராயணன் தமிழில் பிரசுரமான எழுத்தாளர். கணையாழி மற்றும் திண்ணை, பொன்னி, ஆனந்தவிகடன், சாவி பத்திரிகைகளில் இவரது படைப்புகள் வெ. அனந்த நாராயணன், வெங்கட் நாராயணன், நந்து, டெக்ஸன் என்ற வெவ்வேறு பெயர்களில் வெளியாகியுள்ளன. இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் தவிர, இவரது சிறு கதைகளும், குறு நாவல்களும், அமெரிக்கா பற்றிய கட்டுரைகளும் கூட பல பிரசுரமாகியுள்ளன. இணையத்தின் கேள்வி பதில் வலைத்தளமான 'கோரா' வில், ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
நாற்பது வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவில் கணினி நிபுணராகம் பணியாற்றிய பின்பு, தற்போது ஓய்வு பெற்று இந்தியாவில் பங்களூரில் வசித்து வருகிறார். இவரது சிறுகதைத் தொகுப்பு தமிழில் 'பவழமல்லி' என்ற தலைப்பிலும், ஆங்கிலத்தில் (ஆசிரியரின் மொழிபெயர்ப்பில்) 'Yagnam and other stories' என்ற தலைப்பிலும் வெளியாகியுள்ளது. இரண்டுமே அமேஸானில் கிடைக்கிறது.
The items in your Cart will be deleted, click ok to proceed.