Share this book with your friends

Horti Theraphy / ஹார்ட்டி தெரபி

Author Name: Agri. Dr. Y. Rajakumar | Format: Paperback | Genre : Others | Other Details

ஹார்ட்டி தெரபி என்பது ஒரு மருந்தில்லா மனநல மருத்துவ முறையாகும். தோட்டக்கலை உடல் நலத்தையும் மனநலத்தையும் ஒருங்கே காக்கும் தன்மை படைத்தது. ஹார்ட்டி தெரபி பல நோய்களுக்கு இயற்கை முறையில் தீர்வு என்பது இப்போது தெளிவாகி விட்டது. ஹார்ட்டி தெரபி என்பது நோய் வருவதற்கு முன்னால் காக்கும் முழுமருந்து. நோய் வந்த பின் காக்கும் துணைமருந்து. தோட்ட வேலைகளில் ஈடுபடும் போது கொடிய நோய்கள் கூட விடைபெற்று விலகி ஓடி விடுகிறது. இந்த தெரபியானது உங்களின் ஆவலைத்தூண்டி செயல்பாடுகளை தீவிரப்படுத்துகிறது. புஷ்பா ஆயுர் வேதத்தில் கூறுப்பட்டுள் தோட்டக்கலை மருத்துவத்தினை ஹார்ட்டி தெரபி. ஹார்டோதெரபி. ஹார்ட்டிகல்சர் தெரபி என பல பெயர்களில் அழைக்கலாம். இந்நூல் ஹார்ட்டி தெரபி என்ற பெயரில் வெளிவருகிறது. தோட்டக்கலை என்பது ஒரு ருசிகரமான தாவர உலகம். அதில் உள்ளதெல்லாம் மனதைக் கவர்ந்து உள்ளத்தை கிளர்ச்சியூட்டுபவை. இவை உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருவதோடு உற்சாகத்தையும். மகிழ்ச்சியையும், திருப்தியையும் தரும். ஹார்ட்டிதெரபி மூலம் மனம் சிதைவுற்றவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் மறுபிறவி எடுக்கிறார்கள். வயதானவர்களும் உடல் ஊனமுற்றவர்க னமுற்றவர்களும் வாழ்வின் அர்த்தத்தை அறிந்து கொள்கிறார்கள்.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அக்ரி Dr. ஒய். இராஜகுமார்

நூல் ஆசிரியர் பசுமைசாம்பியன் அக்ரி டாக்டர் ஒய். இராஜகுமார் அவர்கள் 1955-ஆம் ஆண்டு மேய் மாதம் 13-ம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தெருவுக்கடை கிராமத்தில் திரு. ஏசுதாஸ், திருமதி. கமலபாய் தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தார். திருமதி. ஷாந்தி என்பவரை வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொண்ட இவருக்கு வினோத் ராஜா என்ற மகனும் ஜில்லா ஜெரிக்ஸ் என்ற மகளும் உண்டு. இவர் தனது ஆரம்ப கல்வியை அரசு தொடக்கப்பள்ளி தட்டான்விளையிலும், உயர்நிலைக் கல்வியை கன்கார்டியா மேனிலைப் பள்ளி பூட்டேற்றியிலும், தாவரவியல் பட்டப்படிப்பை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியிலும், வேளாண்மை பட்டப்படிப்பை உத்திரபிரதேசம் அலகபாத்திலும், இளங்கலை சட்டவியல் மற்றும் முதுகலை சமூகவியல் பட்டப் படிப்புகளை அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலமும் முடித்தார். இவர் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை, விதைசான்றுத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகியவற்றில் பணிபுரிந்து வேளாண்மைத் துணை இயக்குநராக பணிநிறைவு பெற்றவர். அதோடு கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா என்னும் பசுமைப் பேரியக்கத்தை நிறுவி, அதன் நிறுவனத் தலைவராக செயல்பட்டு வருபவர். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர் விவசாயம் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டவர். எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் உள்ள இவர் பசுமைப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர்.

Read More...

Achievements

+5 more
View All