இரண்டு கிளைகள் கொண்ட கதைகளை எழுதுவதில் வித்தகரான எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திகில் நாவல் 'நீல நிலா'.
முதல் கிளை
ஒரு தொழிலதிபருக்கு நேரும் பெரும் விபரீதம். அந்த விபரீதம் எதனால் புரியாமல் கலங்கி தவிக்கும் மருத்துவர்கள் ஒருபக்கம். இது தற்கொலை முயற்சியா அல்லது கொலைமுயற்சியா என துப்புதுலக்க அல்லல்படும் காவல்துறை அதிகாரிகள். அதை ஏற்படுத்திய எதிரி யார் என்பது மற்றொரு பக்கம்.
அவரின் பிள்ளைகளா, நண்பர்களா அல்லது தொழில் போட்டியா...?
கொலையாளி யார் என கண்டுபிடிப்பதில் வெற்றி கிட்டுமா?
இரண்டாவது கிளை
அடர்ந்த காணாதது கண்டான் காட்டில் ஒரு அதிசயத்தை கேள்விப்பட்டு அதன் உண்மைதன்மை அறிய தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு ஒன்று பயணிக்கிறது. அந்த குழு காட்டில் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இயற்கை என்ன என்று கேட்டு துவம்சம் செய்கிறது. அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் அந்த குழுவில் யாரேனும் ஒருவருக்காவது மரணபீதியை அளிக்கிறது. அஞ்சாமல் பயணிக்குமா அந்த குழு?
ஒரு கட்டத்தில் இரண்டு கிளைகளும் இணைகிறது....மர்மங்கள் அவிழ்கின்றன. புதிர்களுக்கான பதில்கள் புலப்படுகின்றன. யாரால்...எப்படி?