அடங்காத முரட்டு குதிரை குமாரனை வளைய வந்தது. நீண்ட நாட்களாக பழகியதை போல் நட்பாக அவனை முகர்ந்து பார்த்தது. அவனை உரசி கொண்டு சுத்தி வந்து “உன்னை சுமக்க தயாராக இருக்கிறேன். என் மேல் ஏறிக்கொள் சேர்ந்து பயணம் செய்வோம்” என்று அழைத்தது.
அடர்ந்து வளர்ந்த நீண்ட வெண்ணிற தாடியை தடவிக் கொண்டு பாலகுமாரன் கேட்டார் “என்னடா சந்தோசமா குதிரையே கூப்பிடுதே போயேன். மேலே ஏறி ராஜாவாட்டம் ஒரு ரவுண்டு சுத்தியிட்டு வாயேன்” புன்னகை நிறைந்த முகத்தோடு முதுகை தட்டி எழுத்துசித்தர் உற்சாகப்படுத்தினார்.
“இல்லை குருவே எனக்கு என்றும் குதிரை ஏற வேண்டும் என்றோ உலகை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்றோ ஆசை இல்லை. இன்று புதிதாக நான் எதையும் சொல்லி விடவில்லை. நீங்கள் சொல்லிக் கொடுத்ததை திரும்பவும் நான் என்னுடைய பாணியில் சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதான் நான் உங்களால் உபயோகிக்கப்படும் சாதாரண கருவி உங்களுடைய உத்தரவு இல்லாமல் இந்த கருவி இயங்காது. இதற்கான முழு பெருமையும் உங்களையே சாரும்” குமாரன் மனதிற்குள் எழுத்து சித்தரை வணங்கி விடைபெற்றான்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners