Share this book with your friends

Vellanthi Manitharkal Vaasam / வெள்ளந்தி மனிதர்கள் வாசம் சிறுகதைத் தொகுப்பு

Author Name: Ranadheeran Prasanna | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

அன்பு சூழ் உலகத்தில் நாம் பார்க்கும் அனைத்து மனிதர்களுமே வெள்ளந்தி மனிதர்கள் தான். நம் மனதுக்குள் எத்தனைக் கோபமும் வன்மமும் இருந்தாலும் எங்கோ ஒரு ஓரத்தில் அன்பு என்ற ஒன்று ஒட்டிக் கொண்டு தான் இருக்கிறது. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களையும் எவ்வளவு அழகாகப் பார்க்கிறோமோ அதை விட அழகாகவே இந்த உலகம் நமக்குக் காட்டுகிறது. உலகின் எந்த மூலைக்கு நீங்கள் சென்றாலும் உங்களை இருகரம் விரித்து வரவேற்க வெள்ளந்தி மனிதர்கள் காத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மென்மையான இதயம் கொண்ட இந்த ஆத்மாக்கள் அவர்கள் நேசிக்கும் உறவுகளுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தவர்கள். தங்களைச் சோகமும் துயரமும் எவ்வளவு ஆட்கொண்டிருந்தாலும் எந்தவித வஞ்சமும் இல்லாமல் சிரிக்கும் வெகுளிதனமான மக்களைப் பார்த்து, கேட்டு, உறவாடிய கதைகள் தான் இந்த வெள்ளந்தி மனிதர்கள் வாசம். இந்தத் தொகுப்பில் இருக்கும் மனிதர்களை நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் சந்தித்து இருப்பீர்கள். அப்படி ஒரு பாக்கியம் கிடைக்கவில்லை என்று நீங்கள் சொல்வீர்களானால் என்றேனும் ஒரு நாள் அவர்களை நிச்சயம் சந்திப்பீர்கள்.

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இரணதீரன் பிரசன்னா

இரணதீரன் பிரசன்னா தமிழ்நாட்டில் உள்ள மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 25 சிறுகதைகள், 4 கவிதைகள், மற்றும் 3 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. தனியார் மருத்துவ துறையில் பணிபுரிந்து வரும் இவர், பகுதி நேர எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார்.  இவரது கதைகள் பெரும்பாலும் இந்து மத தொன்மங்களின் நிகழ்வுகளுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூறப்படும் உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. இணையத்தில் எழுதத் தொடங்கியவர் இப்போது இணைய எழுத்து சமூகத்திற்கு பங்காற்றி வருகிறார்.

Read More...

Achievements